Designed by Iniyas LTD
விரைவில் கேப்பாப்புலவு காணிகள் விடுவிக்கப்படும் – மீள்குடியேற்ற அமைச்சர் உறுதி
கேப்பாப்புலவு மக்களின் காணிகளை இராணுவத்தினரிடம் இருந்து பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் துரித கதியில் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இதன்படி குறித்த காணிகள் வெகுவிரைவில் விடுவிக்கப்படும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார்.
கேப்பாப்புலவுவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் மீள்குடியேற்ற அமைச்சரிடம் இன்று பிற்பகல் தொலைபேசியூடாக தொடர்பை ஏற்படுத்தி கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், கேப்பாப்புலவு காணிகள் விடுவிப்பது தொடர்பிலான பதிலை மிக விரைவில் ஊடகங்களின் ஊடாக பொதுமக்கள் அறிந்திட முடியும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் கேப்பாப்புலவுவில் மக்கள் தமது பூர்வீக நிலங்களை மீட்பதற்காக போராட்டத்தினை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.