தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

விரைவில் மகிந்தவைச் சந்திக்க உள்ளார் எதிர்கட்சிதலைவர் சம்பந்தன்..

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விரைவில் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு நடாத்தவுள்ளதாக  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

புதிய அரசியலமைப்புத் தொடர்பாக மகிந்த ராஜபக்சவுடன் இரா.சம்பந்தன்   உரையாட உள்ளதாகவும் புதிய அரசியலமைப்பை எல்லாக் கட்சிகளினதும் ஆதரவுடன் தான் நிறைவேற்ற முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ச எதிர்கட்சி  தலைவரை சந்தித்தபோது குறித்த விடயம் தொடர்பில் கலந்துரயாட வேண்டுமென  கூறியுள்ளதாகவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

எனினும்  சந்திப்பு நாள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் ,அடுத்த வாரம் நாடாளுமன்றம் கூடும் போது சந்திப்புக்கான நாளை ஒழுங்குபடுத்த முடியும் என நம்புவதாகவும் சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...