தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

விரைவில் மீனவர் பாதுகாப்பு படையை அமைக்க வேண்டும்: ஸ்டாலின்

stalin_002மீனவர் பாதுகாப்பு படையை விரைவில் அமைக்க வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மீனவர் பாதுகாப்பு படை அமைப்போம் என்று கூறி அதிமுக ஆட்சிக்கு வந்தது. ஆனால் 4 ஆண்டுகள் கடந்தும், அந்தப் படையை அமைக்க அதிமுக அரசு முன் வரவில்லை. 2014 ஜனவரியில் இருந்து 2015 மார்ச் வரை 937 தமிழக  மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மீன்பிடி காலம் துவங்கி உள்ள நிலையில், தற்போது 14 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். மீன்பிடி விதிகள் தொடர்பாக மீனவர்களுக்கு கற்றுக்கொடுக்கவோ, மீனவர்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்துகொடுக்கவோ மாநில அரசு இதுவரை முன்வரவில்லை என்பது வருத்தத்துக்குரியது. எனவே, அதிமுக அரசு இனியாவது மீனவர் பாதுகாப்பு படையை உடனடியாக அமைக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Comments
Loading...