Designed by Iniyas LTD
விஷம் குடித்து மயங்கி விழுந்த பெண் காவல்துறை!
தேனி மாவட்டம் பெரிய குளம் தென்கரை காவல் நிலையத்தில் போலீசாக பணிபுரிந்து வருபவர் ஜெயந்தி (வயது 27). இவரது கணவர் மோகன். மதுரை மின் வாரியத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். ஜெயந்தி தேனி காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார்.
நேற்று ஜெயந்தி மனக்கவலையுடன் காணப்பட்டார். மாலையில் பணி முடிந்ததும் வீடு திரும்பிய அவர் வழியில் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்தார். பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் சென்ற அவர் வளாகத்தில் மயங்கி விழுந்தார்.
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் எதற்காக விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்? என்று தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.