தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வீட்டுக்கு சென்ற விருந்தினரை வாளால் வெட்டிய நபர்…

யாழ். அச்சுவேலியில் அயல் வீட்டுக்கு  சென்ற  விருந்தினரை வாளால் வெட்டிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்ருள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அச்சுவேலி, மகிழடி வைரவர் கோயிலுக்கு அருகில்  உள்ள வீட்டுக்கு சென்ற  விருந்தினரை , அயல் வீட்டில் உள்ள  நபர் திடீரென வீடு புகுந்து வாளினால் வெட்டியுள்ளார்.

இந்நிலையில்  வாள்வெட்டிற்கு இலக்கான நபர்    அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதித்ததன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக  யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து வாளினால் வெட்டிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதேவேளை தனிப்பட்ட பகை காரணமாகவே  குறித்த நபரை  வெட்டியதாக ஆரம்ப விசாரணைகளில் சந்தேக நபர் கூறியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளமை குறிப்பிட்டத்தக்கது.

Comments
Loading...