Designed by Iniyas LTD
வீதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பொதுமக்கள்
திருவொற்றியூர் பகுதியில் நடைபெறும் குற்றங்களை தடுப்பதற்காக பொதுமக்களே முன்வந்து முக்கிய வீதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை மேற்கொண்டனர். சென்னை திருவொற்றியூர் அடுத்த ஜோதி நகர் பகுதியில் சுமார் 10 தெருக்கள் உள்ளன.
மக்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் அடிக்கடி இந்த பகுதிகளில் திருட்டு, வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் நடப்பதாக அப்பகுதி மக்கள் புகார் கூறி வந்தனர். இந்நிலையில் அப்பகுதி நிர்வாகிகள் தாங்களாகவே முன் வந்து முக்கியமான தெருக்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியை மேற்கொண்டனர்.
இதையடுத்து எண்ணூர் துணை ஆணையர் செல்வராஜ் கலந்து கொண்டு கேமராக்களை ரிப்பன் வெட்டி இயக்கி வைத்து பேசினார். அப்போது இதுபோன்று ஊர் பொதுமக்களே முன்வந்து கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வந்தால் குற்றங்களை தடுக்க முடியும் எனறு கூறினார்.