தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வீதி விபத்தில் தாய் மகள் பலி!

article_1475123749-body-found-03கல்கிரியாகம பொலிஸ் பிரிவில் புப்போகம விளையாட்டு மைதானத்துக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் பலியாகியுள்ளனர். இந்த விபத்து இன்று காலை ஏற்பட்டுள்ளது. தம்புள்ளையிலிருந்து புப்போகம பகுதி நோக்கி வந்த கெப் ரக வாகனம், வீதியில் நடந்துச் சென்ற பெண்கள் இருவர் மற்றும் குழந்தையுடன் மோதியுள்ளது. இதில் 49 வயதான தாய், அவரது மகளான 24 வயது பெண் ஆகியோரே பலியாகியுள்ளனர். சடலங்கள், தம்புள்ளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரண விசாரணைகள் இன்று இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Comments
Loading...