தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வீரச்சாவுக்குமுன் தியாகி திலீபன் ஆற்றிய இறுதி உரையிலிருந்து சில துளிகள்…

வீரச்சாவுக்குமுன் தியாகி திலீபன் ஆற்றிய இறுதி உரையிலிருந்து சில துளிகள்…

“என் மனம் மகிழ்ச்சியில் மிதக்கின்றது. நீங்கள் பல்லாயிரக்கணக்கில் இந்தப் புரட்சிக்குத் தயார்பட்டுவிட்டதை என் கண்கள் பார்க்கின்றன. நான் திருப்தி அடைகிறேன்.

நான் நேசித்த தமிழீழ மண்ணில் வாழ்கின்ற ஒவ்வோர் மக்களும் இந்தப் பெரும் புரட்சிக்குத் தயாராக வேண்டும் எனது இறுதி ஆசை இதுதான்.

வெகு பெரும்பணியை உங்களிடம் விட்டுச் செல்கிறேன். நான் மிகவும் நேசித்த என் தோழர்கள் என் சகோதரிகள் எல்லாவற்றிலும் மேலாக என் தலைவன் திரு. பிரபாகரன் அவர்கள் உங்களுடன் இருக்கிறார்.

நீங்கள் பரிபூரணமாகக் கிளர்ந்தெழவேண்டும். மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! இப் புரட்சி நாள் என்னுயிருக்கு மேலாக நேசிக்கும் என் மக்களுக்குக் கிடைக்கட்டும்.

எமது எதிர்கால சந்ததி வாழ ஒரு நாடு தேவை. அல்லாவிட்டால் நாளை எங்களைப் போல்தான் எமது எதிர்கால சந்ததியும் துன்பப்படும் வருத்தப்படும்”

‘மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! சுதந்திரத் தமிழீழம் மலரட்டும்” – என்று அறைகூவி, தன் மக்களுக்காகத் தன்னையே அர்ப்பணித்த தியாகச் செம்மல் மாவீரன் திலீபனின்  31 ஆம் ஆண்டின் துவக்கநாளான இன்று, நெஞ்சுருகி நினைவஞ்சலி செலுத்தி  நிற்கின்றோம்.

நல்லூர்க் கந்தசுவாமி கோவில் வீதியில், ஓருயிர் தன்னைத் தானே சிலுவையி;ல் அறைந்து கொண்டது. சாவைச் சந்திப்பதிற்கு அந்த உயிர் தன்கையில் எடுத்த ஆயுதம், அகிம்சை என்று அழைக்கப்படுகின்ற கோட்பாட்டை…

பல்லாயிரக்கணக்கான மக்கள் பரிதவித்துப் பார்த்திருக்க, எம்மினத்திற்காய், எம்  நாட்டின் விடியலுக்காய் , தன் உடலையும், உயிரையும்  தற்கொடையாக்கிய தியாகி திலீபனின்  தியாகம் வரலாற்றில்  முத்தாக பொறிக்கப்படவேண்டிய ஒன்று.

எமது இனத்திற்கு அவன் ஊட்டிய விழிப்புணர்வை, அந்த விழிப்புணர்வின் தேவையை, நாம் இந்த வேளையில் இந்தக் காலகட்டத்தில் கருத்தில் கொள்வது பொருத்தமானது மட்டுமல்ல – மிகவும் அவசியமானதும் கூட!

தமிழர்களின்  தாகம் தமிழீழ தாயகம்….

யாழ் கனகசனா….

Comments
Loading...