தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வெண்கலத்திலான மண்டேலாவின் உயரமான உருவச்சிலை தென்னாபிரிக்காவில் !

131216144358_mandela_statue_304x171_afp_nocredit

நெலசன் மண்டேலாவின் உடல் அவரது சொந்த கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், உலகிலேயே அவருக்கான மிகப் பெரிய சிலை, தென் ஆபிரிக்கத் தலைநகர் பிரிட்டோரியாவில் திறந்து வைக்கப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

வெண்கலத்திலான மண்டேலாவின் அந்த உருவச் சிலை, ஒன்பது மீட்டர்கள் உயரம் கொண்டது. அதன் எடை நான்கரை தொன்கள் ஆகும்.
பிரிட்டோரியாவில் அரச தலைமையகமான யூனியன் கட்டிடத்துக்கு எதிரேயுள்ள புல்வெளியில் இந்தச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
ஒற்றுமை மற்றும் இணக்கப்பாட்டை அவர் முன்னெடுத்தார் என்பதை குறிக்கும் வகையில் அவரது இரண்டு கைகளும் நீட்டி விரித்த வண்ணம் அந்தச் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
பரந்து விரிந்த அவரது கைகள் அனைவரையும் அணைத்துச் செல்ல அவர் முற்பட்டதை சுட்டிக்காட்டுகிறது என்று சிலையை திறந்து வைத்த நாட்டின் அதிபர் ஜேக்கப் சூமா தெரிவித்தார்.
தென் ஆபிரிக்காவில் இணக்கப்பாட்டுத் தினமாக அனுசரிக்கப்பட்டுவரும் மார்கழி மாதம் 16 ஆம் திகதி மண்டேலாவின் உருவச் சிலை, திறந்து வைக்கப்பட்டுள்ளது. அங்கு இன மோதல்கள் முடிவுக்கு வந்த நாளாக மார்கழி 16 ஆம் திகதி கருதப்படுகிறது.
சிறுபான்மை வெள்ளையின மக்களின் ஆட்சி அங்கு இருந்தபோது, அந்த தினம் பழங்குடியின சூலுப் படையினரை ஆபிரிக்கர்கள் வெற்றி கொண்ட நாளாக கடைபிடிக்கப்பட்டது.

Comments
Loading...