தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வெனிசுலாவில் தண்ணீருக்கும் உணவுக்கும் மக்கள் அவதி..

வெனிசுலா நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மின்வெட்டு காரணமாக மக்கள் நீரும் உணவும் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

அங்கு  அதிபர் நிகோலஸ் மதுரோ பதவி விலக வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் கடந்த 7-ஆம் தேதி முதல் நாட்டின் பல்வேறு நகரங்களில் மின்வெட்டு காரணமாக மக்கள் இருளில் தவித்து வருகின்றனர்.

அதோடு அங்கு தண்ணீர் வினியோகமும் மின்சாரத்தைச் சார்ந்தே இருப்பதால் குளிக்கவும், குடிநீர், உணவு தயாரிப்பு உள்ளிட்ட பிற தேவைகளுக்கும் தண்ணீர் கிடைக்காமல் அவதியுறும் மக்கள் கழிவு நீர்க் கால்வாய்களில் போட்டி போட்டுத் தண்ணீர் பிடிக்கும் அவலத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மின்சாரத்தை சார்ந்து செயல்படும் தொழில் நிறுவனங்கள் கடைகளும் முடங்கியுள்ளன.  இந்நிலையில் மின் நிலையங்கள் தாக்குதலுக்குள்ளாகியிருப்பதாக  அந்நாட்டு அரசு  தெரிவித்துள்ளது.

Comments
Loading...