Designed by Iniyas LTD
வெற்றிமுனைப்புடன் இங்கிலாந்து வீரர்கள்
இந்திய, இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்டில் இந்திய அணியின் வெற்றிக்கு 445 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சௌதாம்ப்டனில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 569 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. 3-வது நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி எட்டு விக்கெட்டுகளை இழந்து 323 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் தோனி 50 ரன்களுடனும், முகமது ஷமி 4 ரன்களுடனும் புதன்கிழமை 4-வது நாள் ஆட்டடத்தைத் தொடர்ந்தனர். தோனி மேற்கொண்டு ரன் ஏதும் குவிக்காமல் வெளியேறினார். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 330 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இங்கிலாந்து கேப்டன் குக் பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு அளிக்கும் விதமாக, ஃபாலோ ஆன் முடிவைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, இரண்டாவது இன்னிங்ûஸத் தொடங்க முடிவு செய்தார்.
2-வது இன்னிங்ûஸத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்க வீரர் ராப்சன் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர், முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த கேரி பேலன்ஸ், அலெஸ்டர் குக் உடன் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக ஆடிய பேலன்ஸ் 38 ரன்கள் எடுத்திருந்தபோது, ஜடேஜா பந்தில் புஜாராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர் களம்புகுந்த இயான் பெல் 23 ரன்களில் நடையைக் கட்டினார்.
அடுத்து வந்த ஜோ ரூட் இந்திய பந்து வீச்சை வெளுத்து வாங்கினார். குக், ஜோ ரூட் இருவரும் அரைசதம் கடந்தனர். இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்வதாகத் தெரிவித்தது. இந்திய அணி சார்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இமாலய இலக்கை சேஸ் செய்யும் முனைப்பில் 2-வது இன்னிங்ûஸத் தொடங்கிய இந்திய அணிக்கு முரளி விஜய் 12 ரன்களிலும், புஜாரா 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்திய அணி நான்காம் நாள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து112 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் 6, ரஹானே 18 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
இறுதி நாளான இன்று மேலும் 10 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கட்டுக்களை இழ்ந்து திணறிவருகிறது.