தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வெளிநாட்டு மண்ணில் சாதனை புரியும் பாக் கப்டன்!

201607181939128913_Can-Misbah-become-Most-Test-won-as-captain-out-of-their_SECVPFபாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் பட் கடந்த 2010-ம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடும்போது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டார். அதனால் அவர் தண்டனை பெற்று ஐந்தாண்டு தடையும் பெற்றார்.

அதன்பின் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக மிஸ்பா உல் ஹக் திகழ்ந்து வருகிறார். இவர் டெஸ்ட் அணியின் கேப்டனாக பதவி ஏற்றதும் அந்த அணி நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. இலங்கை வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால், மற்ற நாடுகள் பாகிஸ்தான் சென்று விளையாடவில்லை. இந்த ஒரு குறையைத் தவிர பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள மைதானத்தை தங்களது சொந்த மைதானமாக கொண்டு விளையாடி வருகிறது.

லார்ட்ஸ் மைதானத்தில் முதன்முறையாக களம் இறங்கிய மிஸ்பா சதம் அடித்ததுடன், அணியை வெற்றி பெறவும் வைத்தார். இந்த வெற்றியின் மூலம் மிஸ்பா கேப்டனாக இருந்து வெளிநாட்டு மண்ணில் 21 வெற்றிகளை பெற்றுள்ளார்.

வெளிநாட்டு மண்ணில் 23 வெற்றிகளை குவித்து முதல் இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் கிளைவ் லாய்டு, தென்ஆப்பிரிக்கா முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் ஆகியோர் முதல் இடத்தில் உள்ளனர். மிஸ்பா 21 போட்டியில் வெற்றி பெற்று 2-வது இடத்தில் உள்ளார். இன்னும் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றால் 24 வெற்றிகளுடன் முதல் இடம் பிடிப்பார்.

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன்கள் ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் வாக் ஆகியோர் 19 போட்டிகளில் வெற்றி பெற்று 3-வது இடத்திலும், ஆலன் பார்டர் 13 வெற்றிகளுடன் 4-வது இடத்திலும், 12 போட்டிகளில் வெற்றி பெற்று சர் விவ் ரிச்சர்ட்ஸ் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்

Comments
Loading...