Designed by Iniyas LTD
வெளியுறவுத்துறையின் புதிய செயலாளராக ஜெய்சங்கர் பொறுப்பேற்றுள்ளார்
வெளியுறவுத்துறையின் புதிய செயலாளராக ஜெய்சங்கர் பொறுப்பேற்றுள்ளார். இந்தியாவுக்கான அமெரிக்க தூதராகப் பணியாற்றி வந்த அவர், வெளியுறவுத்துறை செயலாளராக இன்று காலை பொறுப்பேற்றார்.
பொறுப்பேற்ற பிறகு பேசிய ஜெய்சங்கர், அரசின் முன்னுரிமைப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்போவதாகக் கூறினார். முன்னதாக, டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அரசின் நியமனக்குழு கூட்டத்தில், ஜெய்சங்கரை வெளியுறவுத் துறை செயலாளராக நியமிப்பது என முடிவு செய்யப்பட்டது. வெளியுறவுத் துறை செயலாளராக இருந்த சுஜாதா சிங்கின் பதவிக் காலம் வரும் ஆகஸ்ட் மாதம் முடிவடையும் நிலையில் அவர் 8 மாதத்திற்கு முன்பாகவே அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
அதிபர் ஒபாமா இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் வந்து சென்ற நிலையில் இந்தியாவின் வெளியுறவு விவகாரங்களில் ஆற்றல் மிக்க ஒருவரை நியமிக்க பிரதமர் மோடி விரும்பியதாக கூறப்படுகிறது. அதற்கு பொருத்தமாக, வெளியுறவுத்துறை செயலாளர் பொறுப்பில் ஜெயசங்கர் நியமிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.