Designed by Iniyas LTD
வெள்ளைப்பிள்ளையார் ஆலய “கற்பகா” அறநெறிப்பாடசாலையின் ஓராண்டு நிறைவு விழா…
முல்லைத்தீவு நெடுங்கேணி மாமடுச்சந்தி வெள்ளைப்பிள்ளையார் ஆலய “கற்பகா” அறநெறிப்பாடசாலையின் ஓராண்டு நிறைவு விழா நேற்றைய தினம் (20-01-2019) மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இன் நிகழ்விலே பிரதம விருந்தினர்களாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி. சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா மற்றும்,
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் அவர்களும் சிறப்பு விருந்தினராக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்.G.T.லிங்கநாதன் ஒட்டுசுட்டான் பிரதேச இந்து கலாசார அலுவலர் திரு.மோகன்ராஜ் அவர்களும்,
கௌரவ விருந்தினர்களாகமு/தண்டுவான் அ.த.க.பாடசாலை அதிபர் மு/இத்திமடு அ.த.க.பாடசாலை அதிபர் மு/அலைகல்லுப்போட்டகுளம் அ.த.க.பாடசாலை அதிபர் மு/மாமடு,பழம்பாசி அ.த.க. பாடசாலை ஆசிரியர்களும் கிராம அபிவிருத்திச் சங்க பொருளாளரும் அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் அனைவரும் நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தனர்.







