Designed by Iniyas LTD
வேட்பாளர் சின்னம் குறித்து வங்கதேச பெண் வேட்பாளர்கள் எதிர்ப்பு
வங்கதேசத்தில் உள்ளூர் தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னங்கள் குறித்து எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
தேர்தலில் போட்டியிட தமக்கு வழங்கப்பட்ட சின்னங்கள் அவமானகரமாகவுள்ளன என்று வேட்பாளர்கள் தேர்தல் ஆணையாளரிடம் முறைப்படி புகார் செய்துள்ளனர்.
பெண்களுக்கு கைப்பை, வானலி, பிரஷர் குக்கர் மற்றும் முகம்துடைக்கும் பேப்பர்கள் அடங்கிய பெட்டி போன்றவை சின்னங்களாக அளிக்கப்பட்டுள்ளன.
இப்படியான நடவடிக்கை, வங்கதேசத்தில் பெண்கள் வீட்டுக்குளேயே இருக்க வேண்டும் எனும் ஆணாதிக்க சிந்தனையை வெளிக்காட்டுகிறது என்று பெண் வேட்பாளர் ஒருவர் புகார் கூறியுள்ளார்.
ஆனால் அதேநேரம் ஆண் வேட்பாளர்களுக்கு மடிக்கணினி, கிரிக்கெட் மட்டை, சைக்கிள், வான் நோக்கி போன்றவை சின்னங்களாக அளிக்கப்பட்டுள்ளன.
படிப்பறிவில்லாத மக்கள் வேட்பாளர்களை அடையாளும் காண்பதற்காக பல நாடுகளில் இப்படியான தேர்தல் சின்னங்கள் ஒதுக்கப்படுகின்றன