தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வேலூரில் கடும் குளிரால் மக்கள் அவதி!

201612201317559728_heavy-fog-in-vellore_secvpfவேலூர் மாவட்டத்தில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. கடந்த வாரத்தில் ‘வார்தா’ புயலின் தாக்கத்தால் சூறாவளி காற்றுடன் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் பனிப்பொழிவு ஓரளவு குறைவாக இருந்தது. ஆனால் மார்கழி மாதம் பிறந்த பிறகு குளிரின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடந்த 2 நாட்களாகவே வேலூரில் கடுமையான பனி மூட்டம் காணப்படுகிறது. காலை நேரத்தில் எதிரே இருப்பது கூட தெரியாத அளவுக்கு பனிப்பொழிவு கொட்டுகிறது. இதனால் வேலூர் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விடிந்தும் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி செல்கிறார்கள்.

மாலை 5 மணிக்கு மேலும் பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது. காலை, மாலை பனியின் தாக்கம் கடுமையாக இருப்பதால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கி கிடக்குகிறார்கள். சூரியன் வந்த பிறகே, வீடுகளில் இருந்து வெளியில் வருகிறார்கள். கடும் பனிப்பொழிவு மக்களை வாட்டி வதைத்து உறைய வைக்கிறது.

பனியின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வேலூர் மக்கள் வீதியிலும், வீட்டு முன்பும் குப்பைகள் மற்றும் பழைய பொருட்களை கொளுத்திவிட்டு குளிர் காய்கிறார்கள். கொட்டும் பனிக்கும், உறைய வைக்கும் குளிருக்கும் ஸ்வெட்டர், சால்வை விற்பனையும் சூடுபிடித்துள்ளது.

நாட்கள் செல்ல செல்ல பனிப்பொழிவும், உறைய வைக்கம் குளிரும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பனி கொட்டுவதால் மக்கள் சளி, காய்ச்சலால் அவதிப்படுகிறார்கள். பனிக்கு டீக்கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது.

வேலூர் சுகாதார மாவட்டத்தில் வார்தா புயலால் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது. இதனை தவிர்க்கவும் வீடுகளுக்கு பிளிச்சிங் பவுடர் மற்றும் குளோரினே‌ஷன் செய்யப்படுகிறது. அந்தந்த சுகாதார நிலையங்களில் காய்ச்சலை தடுக்க நிலவேம்பு குடிநீரும் வழங்கப்பட்டு வருகிறது.

Comments
Loading...