Designed by Iniyas LTD
வைக்கோவின் பொடா வழக்கு ரத்து
பொடா வழக்கை திரும்பப் பெற முடியாது என்ற பொடா நீதிமன்றம் பிறிப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாக, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வைகோ உள்ளிட்டோரின் மனுவை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருமங்கலத்தில் 2002ல் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகபேசியதாக 9 பேர் மீது வழக்குப் போடப்பட்டது. வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேரில் வீர இளவரசன், பி.எஸ்.மணியம் ஆகியோர் உயிரிழந்தனர்.
2004ல் பொடா வழக்கை திரும்பப் பெறுவதாக அரசு தரப்பு தெரிவித்தும் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. பொடா நீதிமன்ற உத்தரவை எதிர்த்து வைகோ உள்பட 7 பேர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்தத சென்னை ஐகோர்ட் வைகோ உள்ளிட்ட 9 பேர் மீது தொடரப்பட்ட பொடா வழக்கு ரத்து செய்து உத்தரவிட்டது.