தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஸ்மார்ட் போன் கணிணியுடன் நகரங்களை வேட்டையாடுகிறார்கள்!

201604010738165520_we-are-hunting-for-terrorist-in-city-with-computer-or-smart_SECVPFஸ்மார் போன், கணினியுடன் பயங்கரவாதிகள் நகரங்களில் தாக்குதல்களை நடத்துகிறார்கள் என்று அமெரிக்காவில் அணுசக்தி மாநாட்டில் கலந்து கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்துள்ளார்.

பெல்ஜியம் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி, 4வது அணு பாதுகாப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா தலைநகர் வாஷிங்டன் சென்றடைந்தார்.

வாஷிங்டனில் உள்ள அமெரிக்க வெள்ளை மாளிகையில் அணுசக்தி மாநாடு தலைவர்களுக்கு அதிபர் ஒபாமா சார்பில் இரவு விருந்து அளிக்கப்பட்டது. அப்போது, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-

அணுசக்தி பாதுகாப்பு மீது கவனம் செலுத்துவதன் மூலம், அதிபர் ஒபாமா உலகின் பாதுகாப்பிற்கு முக்கிய சேவை ஆற்றியிருக்கிறார்.

பயங்கரவாதத்தில் இருந்து அணு பாதுகாப்பு அச்சுறுத்தல் எப்படி உண்மையில் வந்துள்ளது என்பதை பிரசல்ஸ் தாக்குதல் நமக்கு காட்டியுள்ளது.

பயங்கரவாதத்தை பொறுத்தவரை நாம் மூன்று முக்கிய அம்சங்களை கவனம் செலுத்த வேண்டும். காட்சிகளை போல் பயங்கரமான வன்முறைகளை தற்காலத்தில் அவர்கள் நிகழ்த்துகிறார்கள்.

இரண்டாவது, தீவிரவாதிகள் குகைகளில் இருந்து தாக்குதல் நடத்துவார்கள் என்பதை தாண்டி, கம்யூட்டர்கள் மற்றும் ஸ்மார்ட் போன்களை கொண்டு நகரங்களில் பெரிய தாக்குதல்களை நடத்துகிறார்கள்.

மூன்றாவது, உள்ளூர் நபர்கள் அணு கடத்தல்காரர்கள் மற்றும் பயங்கரவாதிகளிடம் வேலை செய்வது பெரிய ஆபத்தாக உள்ளது.

பயங்கரவாதம் சர்வதேச அளவில் பரவி பிணைந்துள்ளது. ஆனால் நாம் தேசிய அளவில் தான் அதன் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறோம்.  முன்பாதுகாப்பு இல்லாமல், அணுசக்தி பயங்கரவாதத்தை நம்மால் ஒடுக்க முடியாது.

பயங்கரவாதம் என்பது மற்றொரு பிரச்சனை என்ற கருத்தினை கைவிட வேண்டும். அவர்களுடைய பயங்கரவாதி நம்முடைய பயங்கரவாதி இல்லை என்றும் நினைக்கக்கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments
Loading...