Designed by Iniyas LTD
ஸ்ரீலங்காவா? நியூசிலாந்தா? இன்று பரபரப்பு போட்டி!
நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிக்கெதிரான 2வது டி20 போட்டியில் முதல் இணிங்ஸ்க்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நியூசிலாந்து அணிக்கு 143 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமான இப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நியூசிலாந்து அணி, இலங்கை அணியை துடுப்பெடுத்தாட அழைத்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணி, 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்புக்கு ஒட்டங்களை 142 பெற்றுக்கொண்டது. அணியின் அதிகபட்ச ஓட்டமாக, மெத்யூஸ் ஆட்டமிழக்காது 81 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் எளியேட் 4 வீக்கெட்டுகளை சாய்த்தார். இதையடுத்து, 143 ஓட்டவெற்றி இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி தற்போது களமிறங்கியுள்ளது