தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஸ்ரீலங்காவில் மது போதையில் வாகனம் செலுத்திய 306 பேர் கைது

drink driveமது போதையில் வாகனம் செலுத்திய சாரதிகளில் 306 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸ் திணைக்கள ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்யும் நடவடிக்கை, நாடளாவிய ரீதியில் 23ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டவர்களின் விவரம்.

23ஆம் திகதி காலை 6 மணிமுதல் 24ஆம் திகதி காலை 6 மணிவரையிலும் 118 பேர் கைது செய்யப்பட்டனர்.

24ஆம் திகதி காலை 6 மணிமுதல் 25 ஆம் திகதி காலை 6 மணிவரையிலும் 83 பேர் கைது செய்யப்பட்டனர்.

25ஆம் திகதி காலை 6 மணிமுதல் இன்று 26ஆம் திகதி காலை 6 மணிவரையிலுமு; 105 பேரென மொத்தமாக 306 பேர் கைதுசெய்யப்பட்டனர் என்றும் பொலிஸ்பிரிவு அறிவித்துள்ளது.

Comments
Loading...