தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஸ்ரீலங்கா அணி தேர்வுக்குழு உறுப்பினராக குமார்சங்கக்காரா!

Kumar-Sangakkara-007ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு உறுப்பினராக குமார்சங்கக்காரா நியமிக்கப்பட்டுள்ளதோடு, தேர்வுக் குழுவின் தலைவராக அரவிந்த டீ சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இது தவிர, ஏனைய தேர்வுக் குழு உறுப்பினர்களாக ரொமேஷ் களுவித்தாரண, லலித் களுப்பெரும, ரஞ்சித் மதுரிசிங்கே ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நியமனங்கள் அனைத்தும் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உலக இருபதுக்கு-20இல் பங்கேற்பதற்காக, இன்று இரவு இந்தியாவுக்கு, பயணிக்கவுள்ள ஸ்ரீலங்கா  குழாம், இன்று காலை, இப்புதிய தேர்வுக் குழுவால்,அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது

Comments
Loading...