Designed by Iniyas LTD
ஸ்ரீலங்கா தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய ஈழ உணர்வாளர்கள் கைது!
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீலங்கா தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் உட்பட 340 பேர் கைது செய்யப்பட்டனர்.
புனர்வாழ்வு என்ற பெயரில் இனஅழிப்பு வதைமுகாமில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட போராளிகள் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக புற்று நோய் வந்தும்,மர்ம மான முறையிலும் மரணமடைந்து வருகின்றனர்.
சரணடைந்த போது அவர்களுக்கு பரிசோதனை என்ற பெயரிலும்,வலுக்கட்டாயமாகவும் சில வருடங்கள் கழித்து உயிர் போகும்படி சிங்கள அரசால் விச ஊசிகள் போடப்பட்டிருக்கும் என்ற சந்தேகம் வலுக்கின்றது.
கடந்த சில மாதங்களில் மட்டும் 104 முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.
சிங்கள அரசின் இந்த மனித குல விரோத போக்கை கண்டித்தும் , நடந்த மரணங்களுக்கு உரிய விசாரணை கோரியும், சரணடைந்த மீதமுள்ள போராளிகளுக்கு உரிய சர்வதேச மருத்துவ பரிசோதனையை நடத்தக்கோரியும் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப் போராட்டம் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு. ராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் தந்தை பெரியார் திராவிடர் கழக துணைத் தலைவர் செ.துரைசாமி தமிழர் விடியல் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் டைசன் மற்றும் மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்போராட்டத்தில் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரியின் உருவப் பொம்மை எரிக்கப்பட்டது.
