தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஸ்ரீலங்கா பாகிஸ்தான் இன்று மோதல்!

gihgjbjyu765654543-300x160ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரின் இன்று போட்டியில் ஸ்ரீலங்கா  மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. பங்களாதேஷில் நடைபெற்று வரும் இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கான அணிகள் ஏற்கனவே தெரிவாகியுள்ள நிலையில்  போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரின் மூன்றாவது இடத்தை பெற்றுக் கொள்ளும்.

ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரின் புள்ளிப் பட்டியலில் ஸ்ரீலங்கா  மற்றும் பாகிஸ்தான் இரு அணிகளும் இரண்டு புள்ளிகளுடன் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் உள்ள நிலையில் இன்றைய  போட்டியில் வெற்றி பெறும் அணி மூன்றாவது இடத்தை பெற்றுக் கொள்ளும். தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இப்போட்டி எதிர்வரும் 6 ஆம் திகதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...