தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஸ்ரீ அரசினால் காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் புதிய அமைப்பு உருவாக்கம்!

ஈழத்தில்  காணா­மற்­போ­னோ­ரின் உற­வு­க­ளால் மற்­று­மொரு புதிய அமைப்பு நேற்று உரு­வாக்­கப்­பட்­டது. வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரின் அலு­வ­ல­கத்­தில் நடை­பெற்ற கூட்­டத்­தின் பின்­னர் புதிய அமைப்­பின் உத்­தி­யோ­க­பூர்வ அறிக்கை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.
அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது.
‘வடக்­கி­லும் கிழக்­கி­லும் காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ருக்­கான குரல்’ என்ற அமைப்பு காணா­மல் ஆக்­கப்­பட்ட எமது உற­வு­க­ளுக்­கான பொறுப்­புக் கூறலை பன்­னாட்டு மட்­டத்­துக்கு எடுத்­துச் சொல்­லும் நோக்­கில் உரு­வாக்­கப்­பட்­டது. வடக்­கு – கிழக்­கில் மக்­கள் போராட்­டம் வலு­வுற்­றி­ருக்­கும் தரு­ணத்­தில் தக­வல் ரீதி­யா­க­வும் கருத்து ரீதி­யா­க­வும் தெளி­வான கோரிக்­கை­களை பன்­னாட்டு மட்­டத்­தில் முன்­வைக்க வேண்­டும்.
பாதிக்­கப்­பட்­டோ­ருக்­கான நீதியை பன்­னாட்­டுத் தரப்­பு­க­ளும் இலங்கை அர­சி­டம்  மட்­டும் கைய­ளித்­து­விட்டு காலத்தை இழுத்­த­டித்­துக் கொண்­டுள்­ளார்­கள். சமு­தா­யத்­துக்கு ஆதாரபூர்­வ­மா­க­வும் கருத்­தி­யல் ரீதி­யா­க­வும் உரத்­துக் கூற­வேண்­டிய ஈழத்­த­மி­ழர்­க­ளின் ஒன்­றி­ணைந்த குர­லாக இந்த அமைப்பு இயங்­கும். இரா­ணுவ ஆக்­கி­ர­மிப்­புக்­கு தொடர்ந்­தும் ஈழத்­த­மி­ழர்­கள் ஆளாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்­கள்.
அமை­தி­யான போராட்­டங்­க­ளில் ஈடு­ப­டு­ப­வர்­க­ளும், நீதி கேட்­ப­வர்­க­ளும் புல­னாய்­வுக் கண்­கா­ணிப்பு ஊடாக  அச்­சு­றுத்­தப்­ப­டு­கின்றார்கள்.  இலங்­கை­யில்  உள்­நாட்டு நீதித்­துறை முக்­கி­ய­மான விசா­ர­ணை­களை எல்­லாம் கிடப்­பில் போட்டு வரு­கின்­றது.
இன­அ­ழிப்­புப் போரின் பல­வித பரி­மாணங்க­ளில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளா­க­வும் போராட்­டங்­களை முன்­னெ­டுப்­ப­வர் க­ளாகவும் பெண்­கள் இருக்­கி­றார்­கள் . ஆனால்  பெண்­க­ளின் குரலை அமைப்பு ரீதி­யாக முன்­னி­லைப்­ப­டுத்­தும் தன்மை எம்­மி­டையே மிக­வும் குறை­வாக உள்­ளது. ஒருங்­கி­ணைந்த வேலைப்­பாட்­டுக்­கான தள­மா­க­வும் இந்த அமைப்பு இயங்­கும் – என்­றுள்­ளது.
இந்­தச் சந்­திப்­பை­ய­டுத்து செய்­தி­யா­ளர்­க­ளி­டம் முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­த­தா­வது: அரச தலை­வ­ரு­ட­னான சந்­திப்­பின்­போது எமது நிலைப்­பாடு தொடர்­பில் எடுத்­துக்­கூறி அடுத்த கட்ட நிலமை தொடர்­பில் உறு­தி­யான பதி­லைப் பெற்­றுத்­த­ரு­மாறு காணா­மற்­போ­னோ­ரின் உற­வு­கள் கோரி­யி­ருந்­த­னர். இதற்­கான கருத்­துப் பரி­மாற்­ற­மா­கவே இந்­தச் சந்­திப்பு காணப்­பட்­டது. தற்­போது நடத்­தப்­ப­டும் காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வு­க­ளின் போராட்­டம் நீண்டு செல்வதால்  ஏற்­ப­டும் பாதிப்­புக்­கள் தொடர்­பி­லும் கவ­னம் செலுத்­தப்­பட்­டது. எனவே இதற்­கு­ரிய தீர்­வைப் பெறு­வ­தற்­கான வழி வகை­களை கண்­ட­றி­வதே சந்­திப்­பின் நோக்­க­மா­கும்.
இவை தொடர்­பில் பேச்­சுக்­கள் மற்­றும் அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­க­ளுக்­காக காணா­மற்­போ­னோர் தொடா்­பான தர­வு­களை பெறு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வது என­வும் அதனை எவ்­வாறு பெறு­வது என­வும் ஆராய்ந்­தோம். இதன்­போது கடந்த காலங்­க­ளில் பன்­னாட்டு செஞ்­சி­லு­வைச் சங்­கம் போன்ற அமைப்­பு­க­ளால் பெறப்­பட்ட தர­வு­க­ளை­யும் சேக­ரிக்­க­லாம் எனத் தீர்­மா­னிக்­கப்­பட் டது.
இன்­றைய (நேற்­றைய) சந்­திப்­புக்­க­ளின் அடிப்­ப­டை­யில் இவை தொடர்­பில் அரச தலை­வ­ரு­ட­னான சந்­திப்­பின்­போது உரை­யா­டப்­ப­டும் – என்­றார்.
இந்­தச்  சந்­திப்­பில் காணா­மற்போனோரின் உற­வு­க­ளு­டன் வட மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளான  எம்.கே.சிவா­ஜி­லிங்­கம் , அனந்தி சசி­த­ரன் ஆகி­யோ­ரும் கலந்து கொண்­ட­னா்.
Comments
Loading...