தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஸ்ரீ இராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவாக லண்டனில் போராட்டம்!

தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் நீதி கோரும் தன் எழுச்சியான ஜனநாயக ரீதியிலான 113 ஆவது நாளாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் புலம்பெயர் தேசங்களில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் பிரித்தானியா, கனடா, அமெரிக்கா,  போன்ற நாடுகளில் இன்று பெருமளவான தாயக உறவுகள் இணைந்து இந்தப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

மேலும், பிரித்தானியாவில் மதியம் 2 மணி தொடக்கம் மாலை 06 மணி வரை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக செண்பகம் இணையத்தின் பிரித்தானிய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Comments
Loading...