Designed by Iniyas LTD
ஸ்ரீ இராணுவத்தின் பொய்யான வாக்குறுதியே மக்களை போராட வைத்தது!
காணிகளை விடுவிப்பதாக கூறி மக்களை அலைக்கழித்து பொய் பிரசாரம் செய்து ஏமாற்றிய ராணுவத்தின் செயற்பாடுகளே மக்களை போராடும் நிலைக்கு தள்ளியுள்ளதென வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.
படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த ஒரு வார காலமாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை சென்று பார்வையிட்ட ரவிகரன், காணிகளை விடுவிக்கும் வரை போராட்டத்தை கைவிடுவதில்லை என்ற திடசங்கட்பத்துடன் மக்கள் உள்ளனர் எனக் குறிப்பிட்டார்.
காணி விடுவிப்பு தொடர்பாக நேற்றைய தினம் அரச தரப்பு பிரதிநிதிகள் அங்கு செல்வதாக குறிப்பிட்டிருந்த போதும் எந்தவொரு அதிகாரியும் செல்லவில்லை என்பதை சுட்டிக்காட்டிய ரவிகரன், மக்களை தமது சொந்த நிலங்களில் குடியமர்த்த வேண்டிய பொறுப்பு நல்லாட்சியின் கடமையென மேலும் தெரிவித்தார்.
உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் மக்களை மாஞ்சோலை வைத்தியசாலை வைத்திய அதிகாரி உள்ளிட்ட குழுவினர் நேற்று மருத்துவ பரிசோதனை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.