தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஸ்ரீ ஜனாதிபதியின் பதிலுக்காக காத்திருக்கிறோம்! மாவை

mavai-senathirajah575-01வடக்கில் இடம் பெயர்ந்து வாழும் மக்கள் சொந்த இடங்­களில் மீள்­கு­டி­யேற்­றப்­ப­டு­வார்கள் என ஜனா­தி­பதி எமது மக்­க­ளுக்கு வாக்­கு­று­தி­ய­ளித்­துள்ளார். ஜனா­தி­பதி கூறிய 6 மாதங்கள் இம்­மாத நடுப்­ப­கு­தியில் முடி­வ­டை­கின்ற­து. எனவே ஜனா­தி­ப­தியின் பதி­லுக்­காக நாம் காத்­தி­ருக்­கின்றோம். ஒரு வாரத்­திற்குள் பதில் கிடைக்கும் எனவும் எதிர்­பார்க்­கின் றோம் என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மாவை சேனா­தி­ராஜா தெரி­வித்தார்.

வலி.வடக்கு உயர்­பா­து­காப்பு பகு­தியில் உள்ள நடேஸ்­வரா கல்­லூரி மற்றும் நடேஸ் வராகனிஷ்ட வித்­தி­யா­லயம் ஆகி­ய­வற்­றை மீண்டும் சொந்த இடத்தில் இயங்க வைக்கும் நிகழ்வு நேற்று நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கையிலேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.

அங்கு மேலும் உரை­யாற்­று­கையில்,

இடம் பெயர்ந்து வாழும் மக்கள் சொந்த இடங்­களில் மீள்­கு­டி­யேற்­றப்­ப­டு­வார்கள் என ஜனா­தி­பதி எமது மக்­க­ளுக்கு வாக்­கு­று­தி­ய­ளித்­துள்ளார்.மேலும் ஜனா­தி­பதித் தேர்தல் காலத்தில் எமக்கு அளித்த வாக்­கு­று­தியை ஜனா­தி­பதி நிறை­வேற்­ற­வேண்டும்.

ஜனா­தி­பதி கூறிய 6 மாதம் இம்­மாத நடுப்­ப­கு­தியில் முடி­வ­டை­கி­றது. ஆகவே இவ் வாரம் ஜனா­தி­ப­தியின் பதி­லுக்­காக நாம் காத்­தி­ருக்­கின்றோம்.

இப் பாட­சா­லையின் இந்த ஆரம்ப வைப­வத்­தின்­போது எமது ஆரம்ப கால நினை­வுகள் நினை­வுக்கு வரு­கின்­றன. இப் பகு­தியில் பல­போ­ராட்­டங்கள் முன்­னெ­டுத்­துள்ளோம்.

வலி­காமம் வடக்கு மீள்­கு­டி­யேற்­றத்தை வலி­யு­றுத்தி பல­த­ர­பட்ட போராட்­டங்கள், ஊர்­வ­லங்கள் நடாத்­தி­யுள்ளோம். அது­மட்­டு­மன்றி காணி விடு­விப்பு தொடர்பில் உயர் நீதி­மன்­றிலும் வழக்கு தாக்கல் செய்­துள்ளோம்.

இன்­றைய சூழலில் எமக்கு சர்­வ­தேச சந்­தர்ப்பம் ஏற்­பட்­டுள்­ளது. அதனை நாம் முறை­யாக பயன்­ப­டுத்­த­வேண்டும். பயன்­ப­டுத்தி வரு­கின்றோம்.

எமது மக்­களின் காணிகள் ஒப்­ப­டைக்­கப்­ப­ட­வேண்டும். இது நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும் நாம் அர­சுடன் தொடர்ந்தும் பேசுவோம்.

எமது பிர­தேசம் எமக்கு சொந்தமாகும். வலி­வ­டக்கு வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்­ததாகும். இதே­வேளை மயி­லிட்டி துறை­முகம் ஆயுத கிடங்கு இருப்­ப­தாக தெரி­விக்­கின்­றார்கள்.

ஏன்­இங்­கு­ஆ­யு­தங்கள் வைத்­தி­ருக்­கி­றார்கள்? யுத்தம் முடி­வுக்கு வந்து 7 வரு­டங்கள் கடந்­துள்­ள நிலையில் ஆயுதம் இருப்­ப­தாக கூறு­வதை ஏற்­க­மு­டி­யாது.

அணு­குண்டை மாற்றி வைக்கும் நிலை­யுள்ள காலத்தில் ஆயு­தங்கள் இருக்கின்­றன என்று மயி­லிட்டி பிர­தே­சத்தை வைத்­தி­ருக்­காது மக்கள் குடி­ய­மர அனு­ம­திக்க வேண்டும்.

பலாலி விமான நிலையம் பிராந்­திய நிலையமாகும் அமை­ய­வுள்­ளது எனத் திட்­ட­வட்­ட­மாக கூறி­யுள்ள நிலையில் அப்­ப­கு­தி­களில் மக்­களை மீளக்­கு­டி­ய­மர்த்­தப்­ப­ட­வேண்டும்.

எமது இளை­ஞர்கள், யுவ­திகள் மற்றும் யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களுக்­கு தொழில் வாய்ப்­புக்கள் வேண்டும். இன்னும் இரண்டு மூன்று வரு­டங்­களில் இதற்­கான தீர்வு கிடைக்கும். இது தொடர்பில் பல­கட்ட பேச்­சு­வார்த்­தைகள் நடை­பெற்று வரு­கின்­றன.

அழிந்­து­போன எமது பகு­தியை அபி­வி­ருத்தி செய்ய ஒருங்­கி­ணைந்த வேலைத் திட்டம் தேவையாகும். மத்­திய அமைச்­சர்கள் வந்து போகின்­றார்கள். ஏன் வரு­கின்­றார்கள் எனத் தெரி­ய­வில்லை.

பல அமைச்­சர்கள் இருக்­கி­றார்கள். அவர்­களை நாங்­களும் தேட­வேண்டி இருக்­கின்­றது.

மீள்­கு­டி­யேற்ற அமைச்சு கூட எங்­களால் தான் அமைச்சர் சுவாமி நாத­னிடம் சென்­றது. ஆனால் அவர் எங்­க­ளுடன் பய­ணிக்­க­வி­ரும்­பாது வேறு வழியில் செல்ல பார்க்கின்றார்.

அழிந்துபோன எமது பகுதியை அபிவிருத்தி செய்ய உலக நாடுகளுடன் இணைந்து ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும். மத்திய அமைச்சர்கள் வருகிறார்கள். அவர்கள் அதனை செய்கிறேன் இதனைச் செய்கிறேன் என கூறி செல்கின்றார்கள் அவர்கள் அவ்வாறு செய்யமுடியாது என்றார்.

Comments
Loading...