Designed by Iniyas LTD
ஹம்பாந்தோட்டையில் பெருமளவு வெடிபொருட்கள்…
ஹம்பாந்தோட்டை கீழ் அந்தரவெவ பகுதியில், அதிசக்திவாய்ந்த 250 கிலோ கிராம் வெடிப்பொருட்கள் லொறி ஒன்றில் கைப்பற்றப்பட்டுள்ளன.
விசேட அதிரடிப்படையினரால், குறித்த வெடிப்பொருட்கள் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளன.
வெடிப்பொருட்கள் அடங்கிய குறித்த லொறியை சோதனையிடுவதற்காக நிறுத்தக்கோரி, காவல் துறை சமிக்ஞையிட அதனை பொருட்படுத்தாது, லொறியை வேகமாக செலுத்திச் சென்று, இடைநடுவில் கைவிட்டுச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து, கைவிடப்பட்ட குறித்த லொறியை சோதனையிட்ட பொலிஸார் வெடிப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.
