Designed by Iniyas LTD
ஹாட்ரிக் தோல்வியால் அணித்தலைவர் பதவியில் இருந்து விலகமாட்டேன் – குக்
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் இங்கிலாந்து அணி ‘ஹாட்ரிக்’ தோல்வியை தழுவியதால் அணித்தலைவர் குக் மிகுந்த நெருக்கடியில் உள்ளார்.
ஏற்கனவே குக் அணித்தலைவர் பதவிக்கு சரிவரமாட்டார். இவரது தலைமையில் இங்கிலாந்து அணி உலகக்கிண்ணப் போட்டிகளை சந்திக்க முடியாது என முன்னாள் வீரர்கள் விமர்சனங்களை எழுப்பினர். இந்நிலையில் இங்கிலாந்து அணியின் தொடர் தோல்வியால் குக் மிகுந்த மனவேதனையில் இருக்கிறார்.மேலும் ஹாட்ரிக் தோல்வியால் அணித்தலைவர் பதவியில் இருந்து விலகமாட்டேன் என்றும் கூறியுள்ளார்.
இது அவர் கூறுகையில், தற்போதைய நிலையில் நான் அணித்தலைவர் பதவியில் இருந்து விலகும் திட்டம் எதுவுமில்லை. உலகக்கிண்ணம் வரை என்னை அணித்தலைவராக அனுமதிக்கலாம். 3 ஆண்டுகளுக்கு மேலாக அணித்தலைவராக இருக்கும் எனக்கு உலகக்கிண்ணத்தை வெல்வதே லட்சியமாக உள்ளது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.