Designed by Iniyas LTD
ஹைதராபாத் நகரில் 62 போலி மருத்துவர்கள் கைது!
ஆந்திர மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில் 62 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹைதராபாத் நகரில் சில மருத்துவமனைகள் போலி மருத்துவர்களால் நடத்தப்படுவதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து 150 மருத்துவமனைகளில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். இதில் பல மருத்துவமனைகள் போலி மருத்துவர்களால் நடத்தப்படுவது தெரிய வந்தது. இதனை அடுத்து 62 போலி மருத்துவர்களைக் கைது செய்த காவல்துறையினர் அவர்கள் காலாவதியான ஊசிகளைப் பயன்படுத்தியதாகக் கூறினர்.