தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

​மீண்டும் திறக்கப்படும் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம்…

உயிர்த்த ஞாயிறன்று தாக்குதலுக்கு இலக்கான, ​கொழும்பு- கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயமானது, ஆராதனைகளுக்காக மீண்டும் இன்று முதல் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவாலயத்தில் காலை 7 மணியிலிருந்து இரவு 7 மணிவரை ஆராதனைகள் இடம்பெறும் எனவும், திருப்பலி பூஜைகள் இடம்பெறாது என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேவாலயத்துக்கு செல்பவர்களின் பாதுகாப்புக்காக விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு, பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...