தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

‪படமாகிப்‬ போன அவல வாழ்வு: த. செல்வா

aaa1491

என் நகங்களை பிடுங்கினர்
பின் நறுக்கினர் விரல்களை

உன் வாழ்க்கை ஒளி பெற
இதோ மோதிரம் என்றனர்
சுயத்தை மறைத்து
பயத்தை அணைக்கையில்
படமும் எடுத்தனர்

கண்ணி வெடிகளால்
மகன் கால்களை பறித்தனர்
பின்
பள்ளி செல்கையில்
சப்பாத்து தந்தனர்
படமும் எடுத்தனர்

காம வெடிகளால்
என் கண்ணான
மனைவியைப் பறித்தனர்
பின்
மரணச் சான்றிதழுடன்
மலிவான செக்கும் தந்து
படமும் எடுத்தனர்

நிலங்களை பறித்துவிட்டு
வீட்டினைத் தந்தனர்
வீட்டினைத் தருகையில்
பாலியல் லஞ்சம் கோரினர்

கொட்டும் மழையிலும்
கொழுத்தும் வெய்யிலிலும்
கொக்கரிக்கிறோம் இன்றும்
காப்பார் யாருமில்லை
மீண்டும் கழுத்தறுக்கப் படுகிறோம்
சில அரசியல் விலங்குகளால்

-த.செல்வா

Comments
Loading...