தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

100 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்த வெஸ்இன்டீஸ்

3 நாடுகள் கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா ஏற்கனவே தகுதி பெற்று இருந்தது. நேற்று நடந்த கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின. முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 49.5 ஓவர்களில் 285 ரன் குவித்தது. டாரன் பிராவோ 102 ரன்னும், போல்லார்ட் 62 ரன்னும் எடுத்தனர்.West-Indies

ரபடா, மோரிஸ் தலா 3 விக்கெட் கைப்பற்றினார்கள். பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 46 ஓவர்களில் 185 ரன்னில் சுருண்டது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் 100 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. பெகருதீன் அதிகபட்சமாக 35 ரன் எடுத்தார். சுனில் நரீன், கேப்ரியல் தலா 3 விக்கெட்டும், பிராத் வெயிட் 2 விக்கெட்டும் எடுத்தனர். நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.

Comments
Loading...