Designed by Iniyas LTD
102 ஐபோனை திருடிய பெண்ணுக்கு சிறை!
சீனாவின் ஷென்சென் நகரில் நூற்றுக்கும் அதிகமான ஐபோன்களை திருட முயன்ற பெண்மணி கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஐபோன்களை ஹாங்காங்-இல் இருந்து மெயின்லாந்துக்கு கடத்திச் செல்ல இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
102 ஐபோன்களை தனது உடலில் ஒட்டிக் கொண்டதோடு, 15 ஆடம்பர வாட்ச்களையும் வைத்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வித்தியாசமான ஆடை அணிந்திருந்ததால் சந்தேகமடைந்த சுங்கத் துறை அதிகாரிகள் பெண்ணை சோதனை செய்து கடத்தல் சம்பவத்தை கண்டறிந்தனர்.
உடலில் சந்தேகப்படும் வகையில் சீரற்ற முறையில் வீங்கி இருந்தது.ம மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த மெட்டல் டிடெக்டர்களும் கடத்தலில் ஈடுபட்ட பெண்ணை சிக்க வைத்துள்ளது. இவரது உடலில் நான்கு லேயர்களில் ஐபோன்களை சுற்றி கட்டியிருந்துள்ளார். இவரிடம் இருந்து மீட்கப்பட்ட பொருட்களின் மொத்த எடை 9 கிலோ என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மெயின்லாந்தில் இருந்து சீனாவிற்கு ஐபோன்களை கடத்தியதாக பலரை சீன சுங்கத் துறை அதிகாரிகள் ஏற்கனவே பலமுறை கைது செய்துள்ளனர். ஹாங்காங் மற்றும் இதர பகுதிகளை விட மெயின்லாந்தில் ஐபோன்களுக்கான வரி கூடுதலாக 30 சதவிகிதம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனாலேயே இவ்வாறான சம்பவங்கள் அதிகளவு நடைபெறுகிறது.