Designed by Iniyas LTD
109 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ள மன்னார் மனித புதைகுழி அகழ்வு…
மன்னார் சதொச வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த அகழ்வுப்பணிகள் சில வாரங்களாக இடை நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மீண்டும் கடந்த 27ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் இன்று திங்கட்கிழமை 109 ஆவது நாளாகவும் அகழ்வுப்பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மன்னார் நீதவான் ரி.சரவணராஜாவின் மேற்பார்வையில்,சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் குறித்த அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் இதுவரையில் அங்கு 239 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அகழ்வு பணிகள் இடம்பெற்றுவரும் நிலப்பகுதி விஸ்தரிக்கப்பட்டுள்ள நிலையில், விஸ்தரிக்கப்பட்டுள்ள பகுதிகளிலும் மனித எலும்புக்கூடுகள் காணப்படுவதாக தெரியவந்துள்ளது.
மேலும் அகழ்வு இடம் பெறும் இடத்தில் தேங்கி இருந்த மழை நீர் வெளியேற்றப்பட்டு தொடர்ச்சியாக அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றதாக தெரிவிகபப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.