Designed by Iniyas LTD
11 வயதில் 12ம் வகுப்பு தேர்வு எழுதி அசத்திய மாணவன்!
ஐதராபாத்தை சேர்ந்த அகஸ்தியா ஜெய்ஸ்வால் என்ற மாணவன் தனது 11-வது வயதில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளான்.
மனித அறிவை குறைத்து மதிப்பிட முடியாது என்பதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டாய் ஐதராபாத்தை சேர்ந்த அகஸ்தியா ஜெய்ஸ்வால் என்ற மாணவன் தனது 11-வது வயதில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளான்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் 12-ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 12-ஆம் வகுப்பிற்கான உயர்நிலை பொதுத்தேர்வை அகஸ்தியா ஜெய்ஸ்வால் என்ற மாணவன் எழுதி அசத்தியுள்ளான்.
யூசப்குடா பகுதியில் உள்ள தூய மேரி இளநிலை கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வரும் அகஸ்தியா குடியியல், பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகளை ஜீபிளி மலைப்பகுதியில் உள்ள சைதன்யா இளநிலை கலாசலா பள்ளியில் எழுதினான்.
இடைநிலை தேர்ச்சி பெறாத மாணவன் 12-ஆம் வகுப்பு தேர்வை எழுதியுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது. சர்வதேச டேபிள் டென்னிஸ் வீராங்கனையான நைனா ஜெய்ஸ்வாலின் இளைய தம்பி அகஸ்தியா ஜெய்ஸ்வால் என்பது குறிப்பிடத்தக்கது.
அகஸ்தியா தனது 15 வயதில், அரசியல் விஞ்ஞானத்தில் முதுகலை பட்டப்படிப்பை உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் படிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.