Designed by Iniyas LTD
13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை இல்லாமல் செய்யும் இலங்கை அரசின் முயற்சிகளை இந்திய அரசு தலையிட்டே தடுத்து. – இரா.சம்பந்தன்
இலங்கையின் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை இல்லாமல் செய்யும் இலங்கை அரசின் முயற்சிகளை இந்திய அரசு தலையிட்டே தடுத்து நிறுத்தியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்ததாக இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ஆறுமுகநயினார் செய்திச் சேவை ஒன்றிற்கு அளித்த செவ்வியில் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகத் தலைவர்களை நேற்று சனிக்கிழமை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
இலங்கைத் தமிழரின் பிரச்சனைக்கான தீர்வுத்திட்டம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடுகள் பற்றியும் சம்பந்தன் விளக்கமளித்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.