தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

132 ரன்களில் சுருண்டது ஜிம்பாப்வே அணி

நியூசிலாந்து – ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புலவாயோவில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 582 ரன்களும், ஜிம்பாப்வே 362 ரன்களும் குவித்தன. 220 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து 2 விக்கெட்டுக்கு 166 ரன்களுடன் டிக்ளேர் செய்தது.2nd-test-new-zealand

இதன் மூலம் ஜிம்பாப்வேக்கு 387 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.  இந்த நிலையில் மெகா இலக்கை நோக்கி கடைசி நாளான நேற்று 2-வது இன்னிங்சை தொடர்ந்து விளையாடிய ஜிம்பாப்வே அணி 68.4 ஓவர்களில் 132 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 254 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் தொடரையும் 2-0 என்ற கணக்கில் தனதாக்கியது.

Comments
Loading...