Designed by Iniyas LTD
14 ஆண்டுகளுக்கும் மேல் செயல் புரிந்த ரோவருக்கு பிரியாவிடை கொடுத்த நாசா….
கடந்த 15 ஆண்டுகளாக செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்து வந்த ஆப்பர்சுனிட்டி ரோவருக்கு, நாசா பிரியாவிடை கொடுத்துள்ளது.
வெறும் 90 நாட்கள் மட்டுமே ஆயுட் காலத்தைக் கொண்ட குறித்த ஆப்பர்ச்சுனிட்டி ரோவர், 2003ஆம் ஆண்டு ஜூலை மாதம் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய அனுப்பி வைக்கப்பட்டது.
எனினும் யாரும் எதிர்பாராத வகையில் அந்த ரோவரானது 14 ஆண்டுகளுக்கும் மேல் செயல் புரிந்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
செவ்வாய் கிரகம் குறித்து பல வியப்பூட்டும் தகவல்களை அளித்து வந்தஇந்த ஆப்பர்ச்சுனிட்டி ரோவர் கடந்த ஆண்டு ஜூனில் அங்கு வீசிய புழுதிப் புயலில் சேதமுற்றது.
இந்நிலையில் மீண்டும் அதை செயல்படுத்த வைக்கும் பல முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன.
இந்த நிலையில் குறித்த ஆப்பர்ச்சுனிட்டி ரோவர் திட்டம் முடிவுக்கு வந்து விட்டதாக நாசா அறிவித்துள்ளது.

