Designed by Iniyas LTD
14 தமிழக மீனவர்களின் காவலை நீடித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 14 மீனவர்களின் காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு ராமேஸ்வரம் மீனவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கடந்த 1ஆம் தேதி கடலுக்கு சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் 3 படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் இன்று விடுவிக்கப்படுவார்கள் என்று அரசு அறிவித்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்களின் காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதனை கண்டிக்கும் விதமாக ஒருங்கிணைந்த போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும் எனவும் மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.