Designed by Iniyas LTD
157 அகதிகளில் நான்கு பேர் கடுமையாக துன்புறுத்தப்பட்டு, இருட்டறையில் தடுத்து வைப்பு
அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரி சென்ற அகதிகள் ஈழ ஏதிலிகள் சிலர் கடுமையாக துன்புறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பசுமை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாரா ஹன்சன் யங் இதனைத் தெரிவித்துள்ளார்.
157 அகதிகளில் நான்கு பேர் இவ்வாறு கடுமையாக துன்புறுத்தப்பட்டு, இருட்டறை ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தாம் கடந்த புதன் கிழமை அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள கேர்ட்டீன் முகாமிற்கு விஜயம் செய்த போது, அவர்கள் துன்புறுத்தப்பட்டமைக்கான ஆதாரங்களை தம்மிடம் காட்டியதாகவும் அவர் கூறியுள்ளார்.