Designed by Iniyas LTD
16வது நாளாக தொடரும் போராட்டம் அறுவரின் நிலை மோசம்!
மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 14 தமிழ் அரசியல் கைதிகள் இன்று புதன்கிழமை 16ஆவது நாளாகவும் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் அவர்களது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடைய பதிவு
உடல்நிலை பாதிக்கப்பட்ட கைதிகளில் அறுவரின் நிலை மேலும் மோசமடைந்த நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலை வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடேசன் குகநாதன், ந.தர்மராசா, முத்துசிவன் சிவநாதன், அகஸ்தின் ஞானசீலன், பாலசிங்கம் மனோதரன் மற்றும் சிவசுப்ரமணியம் தில்லைராஜ் ஆகியோருக்கே தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இன்று வரை சம்மந்தன் நேரடியாக சென்று அவர்களை பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.