தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

2ஜி வழக்கு –இறுதி வாதம்

2ஜி வழக்கில் இன்று குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பு சார்பில் இறுதி வாதம் தொடங்கியது. முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஆ.ராசா 2007–ம் ஆண்டு முதல் 2009–ம் ஆண்டு தகவல் தொடர்புத் துறை மந்திரியாக இருந்தபோது தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.Raja_Kanimozhi

இதுபற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தி முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி, ராசாவின் தனிச்செயலாளராக பணிபுரிந்த அதிகாரிகள் சித்தார்த் பெகுரா, ஆர்.கே.சந்தோலியா, தனியார் தொலை தொடர்பு நிறுவன நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. 2011–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2–ந்தேதி சி.பி.ஐ. கோர்ட் டில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் சி.பி.ஐ. சார்பில் இறுதி வாதம் நடைபெற்றது. இது நிறைவடைந்ததைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் இறுதி வாதம் பிப்ரவரி 1–ந்தேதி முதல் தொடங்கும் என்று நீதிபதி அறிவித்து இருந்தார்.அதன்படி இன்று சி.பி.ஐ. கோர்ட்டில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் இறுதி வாதம் தொடங்கியது. இதையொட்டி ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜரானார்கள்.முதலில் ஆ.ராசா சார்பில் அவரது வக்கீல் மனு சர்மா இறுதி வாதத்தை எடுத்து வைத்து வருகிறார்.

Comments
Loading...