Designed by Iniyas LTD
20 தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரம்: ஆந்திரா புலனாய்வு பிரிவினர் 3 சாட்சிகளிடம் தொடர்ந்து விசாரணை
ஆந்திராவில் செம்மரக்கட்டை வெட்டியதாக இருபது தமிழர்கள் சுட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் மூன்று சாட்சிகளிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறும் என ஆந்திரா சிறப்பு புலனாய்வு பிரிவு டிஐஜி தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக மக்கள் கண்காணிப்பக நிர்வாக இயக்குனர் ஹென்றி திபேன் மற்றும் சாட்சிகள் மூவரையும் விசாரணை செய்வதற்கான சம்மனை ஆந்திரா மாநில சிறப்பு புலனாய்வு பிரிவு கூடுதல் எஸ்பி சந்திரசேகர், கடந்த 19 ஆம் தேதி நேரில் வழங்கினார்.
அதன்படி மதுரையில் சொக்கிகுளத்தில் உள்ள மக்கள் கண்காணிப்பக அலுவலகத்தில் நேற்று முதல் நாள் விசாரணை நடைபெற்றது. ஆந்திரா மாநில சிறப்பு புலனாய்வு பிரிவு டிஐஜி ராமண குமார் தலைமையில் 15 பேர் கொண்ட குழுவினர் இந்த விசாரணை நடத்தினர். இந்நிலையில் விசாரணையின் முதல் நாளில் மக்கள் கண்காணிப்பக நிர்வாக இயக்குனர் ஹென்றி டிஃபேனிடம் விசாரணை நடந்தது. தொடர்ந்து மூன்று முக்கிய சாட்சிகளிடம் இன்று விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.விசாரணை அனைத்தும் வீடியோ கேமிராவில் பதிவு செய்யப்படுகிறது.
ஆந்திர மாநிலம் சேஷாசலம் வனப்பகுதியில் கடந்த ஏபரல் 7 ஆம் தேதி இருபது தமிழர்கள் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த வழக்கின் முக்கிய சாட்சிகளான சேகர், பாலச்சந்திரன், இளங்கோ ஆகிய மூவரும் தேசிய மனித உரிமை ஆணையத்தின் உத்தரவுப்படி மதுரையில் உள்ள மக்கள் கண்காணிப்பகத்தில் தங்க வைக்கப்படுள்ளனர்