தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

200 வருடங்களுக்கும் மேல் நாட்கூலிகளாக வாழும் மலையக மக்கள்!

---------------9 copyமலை­யக மக்கள் இந்த நாட்டில் 200 வரு­டங்­க­ளுக்கு மேல் வாழும் சரித்­திரம் கொண்ட சமூ­க­மாக இருந்த போதிலும் இன்னும் நாட்­கூ­லி­க­ளா­கவும் இன்­னு­மொரு சமூ­கத்தை அண்டி வாழ வேண்­டிய அவலநிலை சமூ­க­மா­கவும் இருந்து வரு­கின்றோம். மலை­யக சமூகம் ஏனைய சமூ­கத்­தைப்போல் உரிமை பெற்று சரி­ச­ம­மாக வாழ­வேண்­டு­மானால் மலை­யக இளைஞர் யுவ­திகள் மத்­தியில் ஒரு சமூக உணர்வு ஏற்­பட்டு ஒற்­று­மை­யுடன் செயற்­பட முன்­வ­ர­வேண்டும். என மத்­திய மாகாண சபை உறுப்­பினர் ஆர்.ரா­ஜாராம் தெரிவித்தார். நுவ­ரெ­லியா பரி­சுத்த திரித்­துவ மத்­திய கல்­லூரி விளை­யாட்டு மைதா­னத்தில் நடை­பெற்ற மென்­பந்து கிரிக்கெட் போட்­டியில் பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்டு உரை­யாற்­றிய போதே இதனைக் கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில், அர­சாங்­கத்தால் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள புதிய அர­சியலமைப்பில் இளைஞர் யுவ­தி­களின் உணர்­வு­களும் அபி­லா­ஷை­களும் உள்­வாங்­கப்­பட வேண்டும்.

இன்று மலை­யக பெருந்­தோட்டப் பகு­தியில் சம்­பள உயர்­வுப்­பி­ரச்­சினை விஸ்­வ­ரூபம் எடுத்­து­வ­ரு­கின்­றது. இந்த சம்­பள உயர்வுப் பிரச்­சி­னைக்கு பெருந்­தோட்டப் பகு­தி­யி­லுள்ள இளை­ஞர்கள் எதிர்­பார்க்கும் தீர்வை ஒரு அழுத்­த­மாக தொழிற்­சங்­கங்­க­ளுக்கும் முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்­திற்கும் வழங்க வேண்டும்.

மலை­யக இளை­ஞர்கள் வெறு­மனே விளை­யாட்­டிலும் கலை கலா­சா­ரத்தில் மாத்­தி­ர­மல்­லாமல் ஒரு சமூ­கத்தின் தலை­மு­றையை உரு­வாக்­கக்­கூ­டி­ய­வர்­க­ளாகத் திகழ வேண்டும். வடக்கு, கிழக்கு பிர­தே­சத்தில் உள்ள இளை­ஞர்கள் சமூக அபி­வி­ருத்­தி­யை­விட சமூக உரி­மைக்­காக போரா­டி­ய­தாலேயே சர்­வ­தேச சமூகம் அந்த பிர­தே­சத்தை திரும்­பிப்­பார்க்­கக்­கூ­டி­ய­தாக இருந்­தது.

அதே­போல் மலை­ய­கத்­திலும் பாரிய பிரச்­சி­னைகள் இருக்­கின்­றன. தேவை­களும் இருக்­கின்­றன. மலை­யக சமு­தாயம் 200 வரு­டங்­க­ளுக்கு மேல் வாழும் சரித்­திரம் கொண்­டி­ருந்­தாலும் இன்றும் கூலி­க­ளா­கவும் இருந்து வரு­கின்­றார்கள். இந்த சமூகம் விடு­தலை பெற்று உரி­மை­யுள்ள சமூ­க­மாக வேண்டும். இந்த சமூ­கத்தின் குறை­பா­டுகள் சர்­வ­தேச சமூ­கத்தின் கவ­னத்­திற்கு கொண்டு செல்­லப்­பட வேண்டும். இந்தச் சமூகம் முன்­னேற வேண்­டு­மானால் மலை­ய­கத்­தி­லுள்ள இளை­ஞர்கள் தன்­னலம் கரு­தாது சமூக உணர்­வோடு ஒன்­று­பட்டு சமூக அபி­வி­ருத்­திக்­காக செயற்­பட வேண்டும். அவ்­வாறு மலையக இளைஞர் யுவதிகள் மத்தியில் ஒரு எழுச்சி ஏற்பட்டு செயற்படும் பட்சத்தில் எமது மலையக சமுதாயம் எதிர்காலத்தில் இந்நாட்டில் வாழும் ஏனைய சமூகங்களோடு சரிசமமாக வாழும் சூழ்நிலை ஏற்படும் என்பதில் எந்தவித அச்சமும் இல்லை என கூறினார்.

Comments
Loading...