Designed by Iniyas LTD
2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் திகதி தெற்காசிய கண்டத்தை தாக்கிய ஆழிப்பேரலை அனர்த்தத்தின் 9ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்
தமிழர் தாயகத்தில் மறக்கமுடியாத ஆழிப்பேரலையும் சிங்களத்தின் போர் அலையினையும் தமிழ்மக்களால் மறந்துவிட முடியாத அழிவினை ஏற்படுத்தியுள்ளது..2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் திகதி தெற்காசிய கண்டத்தை தாக்கிய ஆழிப்பேரலை அனர்த்தத்தின் 9ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.

இந்த அனர்த்தத்தில் தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, இலங்கை, இந்தியா, மாலைதீவுகள் ஆகிய நாடுகளை தாக்கியதுடன் இரண்டரை இலட்சம் மக்கள் உயிரிழந்தனர்.
ஆழிப்பேரலையினால் காவுகொள்ளப்பட்ட மக்களின் 9 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இன்றும் தமிழர் தாயகத்தில் மக்கள் பல்வேறு தாக்கங்களை எதிர்கொண்டுள்ளார்கள். யாழ்ப்பாணம் தொடக்கம் அம்பாறை வரையில் பாரிய உயிரழிவு பொருள்அழிவினை கொடுத்த இயற்கை அழிவான ஆழிப்பேரலை ஏற்பட்டு 9 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் அந்த இயற்கை அழிவில் உயிரிழந்த மக்களை இன்று நினைவிற் கொள்கின்றோம்
யாழ்ப்பாணம்,முல்லைத்தீவு,திருகோணமலை மட்டக்களப்பு,அம்பாறை வரையான தமிழர் வாழ் இடங்களில் பலஆயிரக்கணக்கான உயிர்களை இழந்து தவிக்கும் இன்றைய நாளில் சிங்கள ஆக்கிரமிப்பின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கம் தமிழ்மக்கள் பல்வேறு இனஒடுக்குதலுக்கும் அடக்குமுறைக்கும் உள்ளாகி வருகின்றார்கள். ஆழிப்பேரலை அழித்த வாழ்இடங்கள் மீண்டும் சிங்களத்தின் போர் அலைகள் தாக்கியதன் வடுக்கள் இன்றும் தமிழர் நெஞ்சங்களில் இருந்து அழித்துவிட முடியாது.
ஆழிப்பேரலையினால் உயிர்களை கொடுத்த உறவுகளும் சிங்களத்தின் முள்ளிவாய்க்கால் போர்அலையில் உயிரினை பலிகொடுத்த மக்களின் உறவுகளும் இன்று ஏங்கி தவிக்கின்றார்கள் இன்றைய நாளில் சுதந்திரமாக இறந்தவர்களை நினைவிற்கொள்ளமுடியாத அளவிற்கு கரையோர பகுதிகளில் படையினர் நிலைகொண்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள் ஆழிப்பேரலையில் உயிரிழந்த மக்களை புதைத்த இடங்களில் நினைவாலயங்களில் உயிரிழந்த மக்களுக்கு வணக்கம் செலுத்தவுள்ளார்கள்.
உலகில் பல்வேறு இடங்களில் இன்று உயிரிழந்த மக்களுக்காக மத வழிபாடுகளும் வணக்கங்களும் நினைவிற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.