தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

2014 – 15 ஆண்டில் டாஸ்மாக் மூலமாக தமிழக அரசுக்கு 18 ஆயிரத்து 146 கோடியே 95 லட்சம் ரூபாய் லாபம்!

தமிழகத்தில் 2014 – 15 ஆண்டின் ஜனவரி மாதம் வரை டாஸ்மாக் மூலமாக தமிழக அரசுக்கு 18 ஆயிரத்து 146 கோடியே 95 லட்சம் ரூபாய் லாபம் கிடைத்துள்ளது.

liquor shopமதுபான விற்பனையும். வருவாயும். தமிழகத்தில், 2002ம் ஆண்டு, ஒரு கோடியே 33 லட்சத்து 65 ஆயிரத்து 419 பெட்டிகள், இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மதுபான வகைகள் விநியோகம் செய்யப்பட்டன. இதேபோல, 54 லட்சத்து 81 ஆயிரத்து 957 பெட்டிகள் பீர் வகைகள் விநியோகம் செய்யப்பட்டன. ஒரு பெட்டி என்பது, 12 முழு பாட்டில்கள் அல்லது 48 குவார்ட்டர் பாட்டில்களை கொண்டது. பீர் வகையை பொறுத்தவரை, 12 பீர்கள் இருக்கும்.

இதுவே, 2003ம் ஆண்டு டாஸ்மாக் மூலம் மதுபான சில்லறை விற்பனை தொடங்கப்பட்ட பின்னர், 2005- 06ம் ஆண்டில், 2 கோடியே 28 லட்சத்து 78 ஆயிரத்து 791 பெட்டிகள் இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மதுபான வகைகள் விற்கப்பட்டன. பீர் வகைகளை பொறுத்தவரை, ஒரு கோடியே 36 லட்சத்து 35 ஆயிரத்து 689 பெட்டிகள் விற்பனை ஆகின.

இவ்வாறு விற்பனை வளர்ச்சி ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து, 2009 – 10ம் ஆண்டில், 4 கோடியே 13 லட்சத்து 67 ஆயிரத்து 435 பெட்டிகள் அயல்நாட்டு மதுபான வகைகள் விற்பனை ஆகின. பீர் வகைகளை பொறுத்தவரை, 2 கோடியே 38 லட்சத்து 76 ஆயிரத்து 513 பெட்டிகள் விற்பனை ஆகின. இந்த விற்பனை தொடர்ந்து அதிகரித்து, 2012-13ம் ஆண்டில், 5 கோடியே 68 லட்சத்து 55 ஆயிரத்து 260 பெட்டிகள் அயல்நாட்டு மதுபான வகைகளும், 3 கோடியே 9 லட்சத்து 51 ஆயிரத்து 835 பெட்டிகள் பீர் வகைகளும் விற்பனை ஆகின.

தற்போது, இந்த ஆண்டு மார்ச் வரை, 5 கோடியே 57 லட்சத்து 30 ஆயிரத்து 612 பெட்டிகள் அயல்நாட்டு மதுபான வகைகளும், 2 கோடியே 50 ல ட்சத்து 15 ஆயிரம் பெட்டிகள் பீர் வகைகளும் விற்பனை ஆகின. டாஸ்மாக் மூலம் சில்லரை விற்பனை தொடங்கப்பட்ட 2003ம் ஆண்டில், மாதத்திற்கு சராசரியாக 13 லட்சத்து 57 ஆயிரத்து 202 பெட்டிகள் விற்பனை ஆகி வந்தன. ஆனால், தற்போது, மாதத்திற்கு சராசரியாக, 46 லட்சத்து 92 ஆயிரத்து 494 பெட்டிகள் விற்பனை ஆகின்றன.

மதுபான விற்பனை மூலம் அரசுக்கு ஆயத்தீர்வை மற்றும் விற்பனை வரியாக அதிகளவு வருவாய் கிடைத்து வருகிறது. அதன்படி, டாஸ்மாக் மூலம் சில்லறை விற்பனை தொடங்கப்படுவதற்கு முன்பாக, 2002ம் ஆண்டில், 3807.47 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது.

அதுவே படிப்படியாக ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து, 2006-07ம் ஆண்டில், 7473.62 கோடி ரூபாயாகவும், 2008-09ம் ஆண்டில், 10,601.59 கோடி ரூபாயாகவும், 2011-12ம் ஆண்டில், 18,100.30 கோடி ரூபாயாகவும், 2012-13ம் ஆண்டில், 21,681.04 கோடி ரூபாயாகவும் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. 2014-15ம் ஆண்டில் ஜனவரி மாதம் வரை, 18 ஆயிரத்து 146 கோடியே 95 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

Comments
Loading...