தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

2015ல் உலகக்கோப்பை போட்டி முடியும் வரை மிஸ்பா உல் ஹக்கை தான் காப்டன்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் கேப்டன் நியமனம் தொடர்பாக கடந்த சில நாட்களாக சர்ச்சை நீடித்து வந்தது. இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 2015ல் உலகக்கோப்பை போட்டி முடியும் வரை மிஸ்பா உல் ஹக்கை கேப்டனாக நீட்டிக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.misbah_ul_haq_001

கேப்டன் பிரச்சினை தொடர்பாக அணியில் சூழ்ச்சி மற்றும் அரசியல் இருந்ததாக கூறிய கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜம் சேத்தி, ஊடகங்கள்கூட சிலருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததாக குறிப்பிட்டார்.

கேப்டன் தொடர்பான அரசியல் மற்றும் நிர்வாக பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கு மிஸ்பா உலகக்கோப்பை வரை கேப்டனாக தொடர முடிவெடுத்ததாகவும் அவர் கூறினார்.

சமீபத்தில் அணியின் தலைமை தேர்வாளர் மற்றும் மேலாளரான மொயின் கான் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியபோது, மிஸ்பாவின் கேப்டன் பொறுப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், கேப்டனை மாற்றுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார். பின்னர் அதனை மறுத்த மொயின் கான், கேப்டன் பதவி தொடர்பான சர்ச்சையைப் பற்றியே இவ்வாறு பேசியதாக சமாளித்தார்.

Comments
Loading...