தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

2016-ம் ஆண்டுக்கான பார்முலா ஒன் உலக சாம்பயின்ஷிப் கார் பந்தயம்

2016-ம் ஆண்டுக்கான பார்முலா ஒன் உலக சாம்பயின்ஷிப் கார் பந்தயம் பல்வேறு சுற்றுகளாக நடைபெற்று வருகிறது. இன்று மலேசியா கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம் நடைபெற்றது. இதற்கான தகுதிச் சுற்றில் மெர்சிடெஸ் அணியின் லெவிஸ் ஹாமில்டன் வெற்றி பெற்று போல் நிலையை அடைந்தார்.  malaysia-gp-redbull

இதனால் இன்றைய போட்டியின்போது முதல் இடத்தில் இருந்து ஹாமில்டன் காரை ஓட்டினார். இவர் மலேசியா கிராண்ட் பிரிக்ஸில் சாம்பியன் பட்டம் வெல்லுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஹாமில்டனில் கார் என்ஜினில் திடீரென கோளாறு ஏற்பட்டதால் போட்டியில் இருந்து விலகினார். மற்றொரு மெர்சிடெஸ் அணியின் ரோஸ்பெர்க் 2-வது இடத்தில் இருந்து தொடங்கினார். ஆனால் ரெட் புல் அணியின் டேனியல் ரிக்கியார்டோ இவரை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தைப் பிடித்தார்.

மற்றொரு ரெட் புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் 2-வது இடத்தைப் பிடித்தார். இந்த வருடத்திற்கான பார்முலா ஒன் கார்பந்தயத்தில் ரிக்கியார்டோவின் முதல் வெற்றி இதுவாகும். இதற்கு முன் 2014-ல்தான் வெற்றி பெற்றிருந்தார்.  ரோஸ்பெர்க்கால் 3-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. கடந்த வாரம் நடைபெற்ற சிங்கப்பூர் கிராண்ட் பிரிக்ஸில் ரோஸ்பெர்க் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...