Designed by Iniyas LTD
2017 இல் நோக்கியாவின் ஐந்து அசத்தல் ஸ்மார்ட்போன்கள்!
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சர்வதேச தொழில்நுட்ப திருவிழாக்களில் நோக்கியா ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் நோக்கியா நிறுவனத்தின் ஐந்து ஸ்மார்ட்போன்கள் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நோக்கியா பிரான்டிங் மூலம் எச்எம்டி குளோபல் நிறுவனம் வெளியிட இருக்கும் புதிய ஸ்மார்ட்போன்களுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின் படி புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் (MWC 2017) எச்எம்டி குளோபல் அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது. இவ்விழாவில் அதிகபட்சம் மூன்று நோக்கியா ஸ்மார்ட்போன்களாவது அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. குறைந்த விலை, பட்ஜெட் விலை, மற்றும் உயர் ரகம் என மூன்று வெவ்வேறு ரகத்தில் இந்த ஸ்மார்ட்போன்கள் வெளியாகும் என தெரிகிறது.
தொடர்புடைய பதிவு
நோக்கியா பிரான்டிங் கொண்ட ஸ்மார்ட்போன்களில் 5.0 இன்ச் மூலம் 5.7 இன்ச் வரை QHD அல்லது ஃபுல்-எச்டி தரம் கொண்ட டிஸ்ப்ளேக்களை கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இத்துடன் எல்ஜி டிஸ்ப்ளே, சென்ச்சுரி டெக்னாலஜி மற்றும் இன்னொலக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பேனல்கள் வழங்கப்படும் என்றும் இவற்றை FIH மொபைல் நிறுவனம் சாதனங்களை தயாரித்து வழங்கும் என கூறப்படுகிறது.
முதற்கட்ட நோக்கியா ஸ்மார்ட்போன்களை எச்எம்டி குளோபல் அடுத்த ஆண்டு சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா 2017 இல் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் அதிகம் எதிர்பார்க்கப்படும் நோக்கியா D1C ஸ்மார்ட்போன் முதலில் அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது. இத்துடன் இவை இரண்டு மாடல்ககளில் வெளியாகும் என்றும், இவை மெமரி மற்றும் டிஸ்ப்ளே அளவுகளில் மாறுபடும் என கூறப்படுகிறது. இத்துடன் நோக்கியா E1 எனும் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனும் வெளியாகும் என தெரிகிறது.
பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனுடன் எச்எம்டி நிறுவனம் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஒன்றை வெளயிடும் என்றும் இதில் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட், 6GB ரேம், 23 எம்பி பிரைமரி கேமரா மற்றும் செய்ஸ் லென்ஸ் உள்ளிட்டவை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.